கோவைப்புதூரில் அதிமுக ஆட்சியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் திட்டத்தில் முறைகேடு - விசாரணை தொடங்கியது!

கோவைப்புதூர் அடுத்த பாலாஜி நகர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் 2015-2016 ஆம் ஆண்டில் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரமற்ற முறையில் இருப்பதாகவும், திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் அளித்த புகாரின் பேரில் விசாரணை தற்போது துவங்கியுள்ளது.



கோவை: கோவைப்புதூர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த புகார் தொடர்பாக விசாரணை துவங்கியது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டம் ரூ.202.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பணியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.



இந்த திட்டத்தின் மூலம் கோவைப்புதூர் பாலாஜி நகர் பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2015-2016 வருடத்தில் கட்டப்பட்டது. இந்த மேல்நிலை தொட்டி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டு அதை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் போது தொட்டியில் நீர்தேக்கம் செய்யப்பட்டு அது பல இடங்களில் நீர்கசிவு ஏற்பட்டு தரமற்ற வகையில் உள்ளதால் பயன்பாடின்றி காட்சி பொருளாகியுள்ளது. 



முறையாக பணிகளை செய்யாமல் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் உள்ளதாக கூறி, உரிய விசாரணைக்கு பரிந்துறை செய்ய மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தார். 

இந்நிலையில் புகார் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்திற்கு அழைப்பாணை வழங்கி விசாரணைக்கு அழைத்தனர் அப்போது ஆதாரங்களை பெற்றுக்கொண்ட போலீசார் கூடுதல் ஆதரங்களையும் கேட்டுள்ளனர். 

இது குறித்து அவர் கூறியதாவது,



முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ள நிலையில், தற்போது குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் அவர் ஊழல் செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...