சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்கு கோவை வந்த ஆட்டிசம் குறைபாடுள்ள 13 வயது சிறுவன் மாயம்…!

கோவை சிங்காநல்லூர் சிக்னலில் நேற்று காலை முதல் யுவன் என்ற 13 வயது சிறுவனை காணவில்லை - யாரேனும் கண்டால் தொடர்பு கொள்ளவும். மகாலட்சுமி: +91-89397-88969, தரணி: +91-97893-05270.

கோவை: சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகர் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (42), இவரது மகன் யுவன் கதிரவன் (13), ஆர்ட்டிசம் குறைபாடுள்ள சிறுவன் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் மகாலட்சுமி தனது மகன் யுவன் கதிரவனுடன் கோடை விடுமுறையை முன்னிட்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்க்காக வந்தனர்.

மேலும் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லேயவுட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் வீட்டிலிருந்த சிறுவன் யுவன் கதிரவன் திடீரென மாயமானார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்ல.

இதையடுத்து மகாலட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்ட்டிசம் பாதிப்புடன் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

சிறுவனின் புகைப்படங்களும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாட்சப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...