கோவை துடியலூர் அருகே வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேகம் விழா கோலாகலம்!

துடியலூர் அருகேயுள்ள கஸ்தூரிநாயக்கன்புதூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேகம் இன்றைய தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தண்டபாணி சுவாமிகள், ராமானந்த குமரகுரு சாமிகள் ஆகியோர் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.



கோவை: துடியலூர் அடுத்த பன்னிமடை அருகேயுள்ள வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பன்னிமடை அருகிலுள்ள கஸ்தூரிநாயக்கன்புதூரில் செல்வ கணபதி மற்றும் வேட்டைக்காரன் சாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவானது, கடந்த 24 ஆம் தேதி மங்கல இசை, திருவிளக்கு வழிபாடு, மூல மந்திரம் வழிபாட்டோடு தொடங்கியது.

இதனை தொடர்ந்து பன்னிமடை கிருஷ்ணசாமி கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், தீர்த்த குடம் எடுத்து வருதல், மகா கணபதி வழிபாடு, அடியார்களுக்கு காப்பு அணிவித்தல், புற்று மண் வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.



இதனையடுத்து, கணபதி வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை, புனித நீர் தெளித்தல், 108 மூலிகை அருள்நிறை ஏற்றுதல், திருக்குடங்கள் வலம் வருதலதைத் தொடர்ந்து கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து வேட்டைக்கார சாமிக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தண்டபாணி சுவாமிகள், ராமானந்த குமரகுரு சாமிகள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.



இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ அருண்குமார், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், கவுன்சிலர் ஆறுச்சாமி முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், பி.வி.மணி, செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.எம். ரத்தின மருதாசலம், திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, ஊராட்சி துணைத் தலைவர் அருள்குமார், முன்னாள் கவுன்சிலர் சரவணன், அய்யாசாமி, மோகன்ராஜ், காளியப்பன், ராஜேந்திரன், கோபால்சாமி. கோவில் நிர்வாகிகள் தர்மன், குப்புராஜ், சதீஷ்குமார், விஜயகுமார், ரவிச்சந்திரன், சுப்பிரமணியம், பிரபு, பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், பிரகாஷ், செல்வம், நட்ராஜ், பார்வதி, நாச்சிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சிகளை இந்த கோவில் தலைவர் ரங்கசாமி, செயலாளர் அசோகன், பொருளாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...