கோவையில் மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சம் - உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கைது!

கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் பகுதியில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சமாக வாங்கிய மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி அருகே நவாவூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (78). இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் வெங்கடேஷ் என்பவர் துரைசாமியின் கடைக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். 

அப்போது கடையின் உரிமம் காலவதியாகி இருந்தது. இதையடுத்து அதை புதுப்பிக்க வேண்டும் என்று துரைசாமியிடம் வெங்கடேஷ் கூறியுள்ளார். மேலும் உரிமத்தை புதுப்பிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. பின்னர் அதை குறைத்து ரூ.15 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. ஆனாலும் பெரிய தொகையென துரைசாமி கூறியதால் இறுதியாக ரூ.7 ஆயிரம் கேட்டு உள்ளார். 

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசாமி கோவை லஞ்ச6 ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரம் ரூபாயை துரைசாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அந்த ரூபாய் நோட்டுகளுடன் உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசை துரைசாமி தொடர்புகொண்டு பேசினார். 

அப்போது அவர் வடவள்ளி சாலை பால்கம்பெனி அருகே துரைசாமியை வர அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை துரைசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷிடம் கொடுத்தார். 

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான போலீசார் வெங்டேசை சுற்றி வளைத்தனர். கையும் களவுமாக பிடிபட்ட வெங்கடேசை லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...