கோவையில் பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்காததால் திருப்பூர் விவசாயி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் அடுத்த அவிநாசியை சேர்ந்த பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யும் விவசாயி வேலுச்சாமி, ரூ.70 மதிப்புள்ள தனது பட்டுக் கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில், ரூ.30க்கு கேட்டதால் ஆத்திரமடைந்த வேலுசாமி, பட்டுக்கூடுகளை அங்காடியின் முன்பு தரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் பட்டுக்கூடு அங்காடியில் உரிய விலை கிடைக்காததால் விவசாயி ஒருவர் தனது பட்டுக்கூடுகளை தரையில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் பல ஆண்டு காலமாக பட்டு கூடு உற்பத்தி செய்து வருகிறார். வேலுச்சாமி உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் வைத்து ஏலத்திற்கு விடுவது வழக்கம்.

அப்படி இன்று வழக்கம் போல அவர் கொண்டு வந்த இரண்டாம் தர பட்டுக்கூடை ஏலத்திற்கு விட்ட பொழுது இடைத்தரகர்கள் கிலோ 30 ரூபாய்க்கு கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர் 70 ரூபாய்க்கு கொடுக்கப்படும் பட்டுக்கூடை 30 ரூபாய்க்கு தரமாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனால் இடைத்தரகர்கள் வாங்க மறுத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தனக்கு உரிய விலை கிடைக்காததால் கொண்டு வந்த பட்டுக்கூடை மீண்டும் கொண்டு சொல்ல மாட்டேன் எனக்கூறி பட்டுக்கூடை அங்காடி முன்பு கொட்டி தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் தனக்குரிய 70 ரூபாய் விலையை தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இதற்கு பட்டுக்கூடு அங்காடியின் அதிகாரிகள் வேலுச்சாமி கொண்டுவந்த பட்டுக்கூடு பயனற்றது என்றும் இதை அவர் சொல்லும் விலைக்கு எடுக்க முடியாது என்றும், தரத்திற்கு ஏற்ற விலை தான் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...