கோவை அருகே ஆசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - பரபரப்பு!

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த அம்ஜத் அகமது (19) என்ற மாணவர், தேர்வில் காப்பி அடித்ததால் பெற்றோரை அழைத்து வர கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவர் கல்லூரியின் 2வது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வேலந்தாவளம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில், ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அம்ஜத் அகமது (19). இவர் கோவை அருகே கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்றது.

அப்போது மாணவர் அம்ஜத் அகமது, தேர்வு எழுதும் போது காப்பி அடித்ததாக தெரிகிறது. இதனை தேர்வு மையத்தில் பணியில் இருந்த 2 பேராசிரியர்கள் பார்த்து மாணவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர். மேலும் தேர்வில் காப்பியடித்தற்காக மாணவரிடம் பெற்றோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தகவலறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே கல்லூரி மாணவரை பெற்றோரை அழைத்து வர கட்டாயபடுத்தி மிரட்டிய ஆசிரியர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...