கோவையில் தனியார் கல்லூரி பேராசிரியையிடம் நகையை பறிக்க முயற்சி - இளைஞர் கைது!

வெள்ளலூர் அருகே என்.ஜி ஆர் சாலையில் சென்ற தனியார் கல்லூரி பேராசிரியரான ஜெயகௌரி (44) என்பவரது கழுத்தில் இருந்த நகையை இளைஞர் ஒருவர் பறிக்க முயன்ற நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பேராசிரியர் ஜெயகௌரியே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வெள்ளலூர் அருகே கல்லூரி பேராசிரியரிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் என்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு என்பவரது மனைவி ஜெயகௌரி (44). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் புதன்கிழமை மாலை பணி முடிந்து வந்த ஜெயகௌரி என்.ஜி ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் திடீரென ஜெயகௌரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட ஜெயகௌரி அந்த இளைஞரை மடக்கி பிடித்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்களும் கூடி இளைஞரை பிடித்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் பிடிபட்ட நபர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது.

மேலும், கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி கால் டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்து வந்த இவர், பணத்திற்காக பேராசிரியை ஜெயகௌரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...