அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக எழுந்த புகார் - திருப்பூரில் டாஸ்மாக் கடையின் புது ஐடியா!

திருப்பூர் மாவட்டம் இடுவாய் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து, மது வாங்க வருபவரின் வயதை அறிந்த பின்னர், பாட்டில்களுக்கு ரசீது வழங்கி மது பாட்டில்களை விற்பனை செய்யப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது போட்டு மது விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பூர் அருகே இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மதுபாட்டிலுக்கு முப்பது ரூபாய் கூடுதலாக பெறப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் மதுக்கடையில் பீர் இருப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அந்த கடையில் அமைந்துள்ள பாரில் கூடுதல் விலைக்கு பீர் விற்பனை செய்யப்படுகிறது என்ற புகாரும் எழுந்தது.



இதனால் கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு கடை ஊழியர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டனர். 

இதனால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. உரிய வகையில் விற்பனை நடத்த வேண்டும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆதாரங்களுடன் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்படும் என விவசாய சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் இன்று முதல் இடுவாயில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மது வாங்க வருவோரின் வயது என்ன என்பதை விசாரித்த பிறகு மது பாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது வழங்கி மது பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.



கடை ஆரம்பித்த நாளிலிருந்து ரசீது போட்டு மது பாட்டில் விற்பனை செய்வது இதுவே முதல் முறை என அப்பகுதி மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 20 ரூபாய் வாங்கி வந்த நிலையில் இதே போன்று ரசீது வழங்கி மது பாட்டில்களை அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...