பல்லடம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎஸ்பியிடம் மனு அளிக்க வந்த மக்கள் திடீர் சாலை மறியல் - பரபரப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் அருகேயுள்ள டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்த பச்சாபாளையம் பகுதி மக்கள், மனுவை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள டிஎஸ்பி அலுவலகம் முன்பு பச்சாபாளையம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பச்சாபாளையம் பகுதியில் இன்று காலை மாகாளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் 12 சவரன் தங்க நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த திருட்டு புகாரில், மின்மயான எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த R.K.ராஜா மற்றும் திமுக உறுப்பினர் அய்யாசாமி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக திமுகவை சேர்ந்த நடராஜ் என்பவர் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

திமுக நகர செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் 8வது வார்டு கவுன்சிலர் சுகன்யாவின் கணவர் ஜெகதீஷ் என்பவர் மின்மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணத்தால் பல்வேறு பிரச்சனைகளை தூண்டிக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி, மேற்குறிப்பிட்ட நபர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பச்சாபாளையம் பகுதி மக்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், புகாரை பெற தாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய பொதுமக்களிடம் ஆய்வாளர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



இதனையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியாவை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனுவை அளித்தனர். மனு கொடுக்க வந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...