கோவை சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது - ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

சூலூர் அடுத்த பள்ளபாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சரவணன், அஸ்வின், சுஜித், மற்றும் கிரிதரன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை பள்ளபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அப்பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சரவணன், அஸ்வின், சுஜித், மற்றும் கிரிதரன் உள்ளிடோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் சரவணன், அஸ்வின் மற்றும் சுஜித் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நடைபெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...