வால்பாறையில் இன்று கோடை விழா தொடக்கம் - 3 நாட்கள் நடக்கிறது!

வால்பாறையில் நடப்பாண்டு கோடை விழா இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழாவானது இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு கொடி ஏற்றி கோடை விழாவை துவக்கி வைத்தனர்.



கோடை விழா நடைபெறும் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவின் நுழைவாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜேர்பார், ரோஜா, டென் ரோ பியம், புளூடெய்சி, பல வண்ண கார்னேசன் உள்பட 6,500 மலர்களால் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 

இதில் செல்பி ஸ்பாட், வண்ணத்து பூச்சி, மிக்கி மவுஸ் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் 250 காய்கறிகள் மூலம் வரையாடு, கோடைவிழா சின்னமான இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 



சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு படகுசவாரி, சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி மற்றும் நகர மன்ற துணை தலைவர் செந்தில் குமார் ஆகியோர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.



பின்னர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர். 

மேலும் இங்கு வனத்துறை சார்பில் இயற்கை பொருட்களை கொண்ட அரங்கம் அமைத்து புலி, சிறுத்தை, போன்ற வன விலங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் பரதநாட்டியம், யோக நடனம், கரகாட்டம், காவடி ஆட்டம், படுகர் இன நடனம், முருகன் வள்ளி கும்மி பாட்டு, பழங்குடியினர் நடனம், வாத்தியம், காவல்துறையின் நாய்கள் சகாசம், நாய்கள் கண்காட்சி, டீ தூள் தயாரிப்பு போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கோடை விழாவின் நிறைவு நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...