கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், காவல்துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

கோவை துடியலூர் காவல் எல்லையில் இருந்து பிரித்து கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே காவல் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த புதிய காவல் நிலையத்தை தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி வைத்தும் தொடங்கி வைத்தார். 



தொடர்ந்து அங்குள்ள காவல் துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரேந்திரகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் குமார், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...