கோவை மாநகரில் 14 பெண் காவலர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் - டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார்!

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையில் பெண் காவலர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டு, கனரக வாகன பயிற்சி முடித்த 14 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் 14 பெண் காவலர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார். 

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாநகரில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காவல்துறையில் பெண்கள் இல்லாத பிரிவுகளில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களில் கனரக வாகனம் ஓட்ட விருப்பமுள்ள காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு காவல்துறை சார்பில் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சியில் காவல்துறை பேருந்து, வஜ்ரா வாகனம் உள்ளிட்ட அனைத்து வகை கனரக வாகனங்களும் ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் கனரக வாகனங்கள் ஓட்டி பயிற்சி பெற்ற 14 பெண் காவலர்களுக்கு பேட்ச் போடப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பெண் காவலர்களுக்கு வழங்கினார். 

அதேபோல மோப்பநாய் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு இளம் பெண் பட்டதாரி பெண் காவலர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...