கோவை சைபர் கிரைமில் பயிற்சிக்கு வந்த கல்லூரி மாணவர்களுடன் தமிழக டிஜிபி ஆலோசனை!

கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் பயிற்சிக்காக வந்த மாணவர்களை நேரில் சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மாணவர்களிடம் சைபர் கிரைம் குற்றங்கள், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, சைபர் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது, தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல்துறை சைபர் பிரிவில் பயிற்சிக்கு வந்த கல்லூரி மாணவர்களை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார். 

கோவையில் நடைபெற்ற காவல்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் நான்கு புதிய காவல் நிலையங்கள் திறப்பு விழாவிற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை வந்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டார். 

பின்னர், கோவையில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் பொதுமக்கள் இழந்த பொருட்களை மீட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் ஆணையர் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய போது அலுவலக வாயிலில் காத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை சைலேந்திர பாபு சந்தித்தார். அவர்களை அழைத்து பேசினார். 

அப்போது அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கல்லூரியில் படித்து வருவதாகவும், கோவை மாநகரில் உள்ள சைபர் கிரைம் போலீசில் பயிற்சிக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், தற்போது எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எவ்வாறு சைபர் குற்றங்கள் நடக்கிறது மற்றும் தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...