கோவை போத்தனூர் ரயில் நிலைய மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலைய நடைமேடை அருகேயுள்ள மின்கம்பத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: போத்தனூர் ரயில்வே நடைமேடை அருகே மின்கம்பத்தில் தூக்கிய தொங்கிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போத்தனூர் ரயில் நிலைய பிளாட்பார்ம் அருகே உள்ள ரயில்வே மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக அங்கிருந்தவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். 



இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போத்தனூர் ரயில்வே போலீசார், மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தூக்கில் தொங்கியவர் யார்? எதற்காக வந்தார்? எப்போது சம்பவம் நடந்தது? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதல் கட்டமாக நடைமேடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...