கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்!

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிக்காரம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.



கோவை: கோவையில் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர், கடந்த 24 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். 

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மூளை சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

இந்நிலையில், பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் வந்தனர். இதனையடுத்து, பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர். 

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனை உள்நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனை உள் நோயாளிக்கும், கல்லீரல் கோவையில் தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது. 

உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவரின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...