வால்பாறையில் 2வது நாள் கோடை விழா - அலைமோதிய மக்கள் கூட்டம்!

வால்பாறையில் கடந்த 26ஆம் தேதி கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் 2வது நாளான நேற்று நாய்கள் கண்காட்சி, மலர் கண்காட்சி, பரதநாட்டியம், பட்டிமன்றம் இசை நிகழ்ச்சி பாரா கிளைடிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தொடங்கி வைத்தார்.

கோவை: வால்பாறையில் 2 நாள் கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி, மலர் கண்காட்சி, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த கோடை விழாவின் 2வது நாளான நேற்று, நாய்கள் கண்காட்சி, மலர் கண்காட்சி, பரதநாட்டியம், பட்டிமன்றம் இசை நிகழ்ச்சி பாரா கிளைடிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய கோடை விழா நிகழ்ச்சியானது, முதலாவதாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கு பெற்றன.

இந்நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் மற்றும் ஆணையாளர் வெங்கடாசலம் ஆகியோர் துவங்கி வைத்தனர். நாய்கள் கண்காட்சியில் முதலிடம் பிடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் உரிமையாளர் சுபாஷ், இரண்டாம் இடம் பிடித்த லேபர் ரெட்டிவர் காவியன், மூன்றாம் இடம் பிடித்த புள்ளி கூட்டான், காமராஜ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



அதை தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து வருகை தந்த பரதநாட்டிய குழுவினர்கள் பரத நாட்டிய நடனம் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர். 



அதன் பின்பு அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாரா கிளைடிங் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்,



இதனையடுத்து மாலையில் நடைபெற்ற யோனாவின் மேஜிக் ஷோ நிகழ்ச்சிகளை பொது மக்கள் அனைவரும் கண்டு கழித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...