கோவையில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு துவங்கியது - 18 மையங்களில் நடைபெற்றது

நாடு முழுவதும் இன்று சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையில் 18 மையங்களில் இன்று தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை கண்காணிக்க பல்வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்வில் பங்கேற்க 7,742 பேர் பதிவு செய்திருந்தனர்.

கோவை: கோவையில் இன்று சிவில் சர்வீசஸ் தேர்வுகள் 18 மையங்களில் நடைபெற்றது.

நாடு முழுவதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில், 18 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்விற்கு கோவை 7,742 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.



இத்தேர்வானை மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் துணை ஆட்சியர் முன்னிலையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் இந்த 18 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டது.

மேலும், துணை வட்டாட்சியர் நிலையில் 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 341 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் மொத்தம் 682 அறைகண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.



தேர்வை பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை இயக்குநர் நிலையில் அலுவலர் ஒருவரும் மற்றும் மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவரும் தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் சிக்னல் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...