கோவையில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய மாநகராட்சி தூய்மை பணியாளர் கைது!

கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த சதீஸ் (30) என்பவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழகி வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வரன் பார்த்து வந்ததால் ஆத்திரமடைந்த சதீஸ், இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நிலையில், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய மாநகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குனியமுத்தூர் அருகேயுள்ள மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஸ் (30). இவர் கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நட்பாக பழகிவந்த 27 வயது பெண்ணிற்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சதீஸ், பெண்ணை திருமணம் செய்ய கூடாது என வற்புறுத்தி சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று அப்பெண்ணின் பிறந்த நாளை முன்னிட்டு சதீஸ் அவரை கே.ஜி சாவடி அருகே உள்ள ரொட்டிகவுண்டன்புதூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணிடம் வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என கூறி மிரட்டியதாக தெரிகிறது.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சதீஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை சதீஸ் மதுக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார். 

அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு, முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தனர். இதையடுத்து அங்கு அழைத்துச் சென்று அனுமதித்த சதீஸ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கத்தியால் குத்தி தப்பிய சதீஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...