அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் - பல்லடம் அருகே கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை!

அழிந்து வரும் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை மீட்டுருவாக்கம் செய்ய அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள இடுவாய் கிராமத்தில் நடைபெற்ற கும்மியாட்ட அரங்கேற்ற விழாவில் கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: அரசு விழாக்களில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பவளக்கொடி கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம் அருகேயுள்ளா இடுவாய் கிராமத்தில் இன்று பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவினரின் 42வது கும்மியாட்ட அரங்கேற்ற விழா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் ஒரே சீருடையில் காலில் சலங்கை கட்டிக்கொண்டு கைகளை தட்டி கும்மியடித்து மகிழ்ந்தனர்.

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனனின் அரச வாழ்க்கை, அவர் அரசாண்ட பகுதியில் மக்கள் மீதும் மண் மீதும் அவர் வைத்த பற்று, அவரது திருமண வாழ்க்கையின் கதையினை பாடல்களாக பாடி நான்கு மணி நேரம் கும்மியாடினர். ஒரே சீருடையில் 150க்கும் மேற்பட்டோரின் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



மேலும் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒரு சேர கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும், அழிவின் விளிம்பில் உள்ள கும்மியாட்டத்தை மீட்டு உருவாக்கம் செய்து பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் சுதந்திர தின விழா, 

குடியரசு தின விழா போன்ற அரசு விழாக்களில் நடைபெறும் அணிவகுப்புகளில் கும்மி ஆட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அனுமதி அளிக்க வேண்டும் என அரசுக்கு கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

கைபேசி பயன்பாட்டில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க கும்மியாட்ட கலை உதவுவதாகவும், கைகளை தட்டி நடனம் ஆடும் போது உடலில் உள்ள அனைத்து பாகங்களும் புத்துணர்வு பெறுவதாகவும் இளம் தலைமுறை இந்த கும்மியாட்டத்தை கொண்டு சேர்க்க உதவும் வகையில் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...