வால்பாறையில் கோடை விழா நிறைவு நாள் - அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று நலத்திட்ட உதவி வழங்கினார்!

வால்பாறை கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அமைச்சருக்கு, 1000 மகளிர் பெண்கள் குடம் எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.39.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: வால்பாறை கோடை விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, ரூ.39.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா மூன்று நாள் நடைபெற்றது. இறுதி நாள் நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அவருக்கு வால்பாறை நகரமன்ற தலைவர் மற்றும் ஆணையாளர். திமுக நிர்வாகிகள் வால்பாறை அஞ்சலக பகுதியில் இருந்து சாலையில் இருபுறங்களிலும் வாழை மரங்கள் வைத்து வரவேற்பு அளித்தனர்.



இதில் 1000 மகளிர் பெண்கள் குடம் எடுத்து அமைச்சரை வரவேற்றனர். கோடை விழா நடைபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மலர் கண்காட்சி, வனத்துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள வனவிலங்கு கண்காட்சி போன்றவைகளை பார்வையிட்டார்.



பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறினார். அப்போது அமைச்சர் பேசியதாவது, வால்பாறையில் 10 ஆண்டுகளுக்கு பின் கோடை விழா நடைபெறுகிறது. இந்த கோடை விழா இனி வருடம் தொரும் நடைபெறும். திமுக 2 ஆண்டு நிறைவு சாதனையில் 505 வாக்குறுதி 80 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி தேவையான வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று உள்ளது. கோவை மாவட்டம் என்றால் முதல்வருக்கு பிடித்த மாவட்டமாக உள்ளது. கோவையில் 9 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ திட்டம் கொட்டுவரப்பட்டு உள்ளது.

கோவையில் புதியதாக tn XT it park நிறுவனத்தை துவங்க அறிவிப்புகள் வழங்கி உள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று உள்ளது. அதை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும்.

புதுமை பெண் திட்டம் அரசு பள்ளியில் படித்து மேல் படிப்புக்கு செல்லும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்க 380 வழங்கப்பட்டு உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் 18 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்க 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நான் முதல்வர் திட்டம் 1.50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு கூடுதலாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நம்மை கக்கும் 48 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. வால்பாறை மக்களுக்கு நகர் புறங்களில் போல் மகளிர்களுக்கு கட்டணம் இல்ல பேருந்து பயணம் சட்டமன்றத்தில் பேசி முதல்வர் அறிவிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



இதன் பின்னர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முதியோர் உதவித் தொகை 76 பேருக்கும், குடும்ப அட்டை 13 பேருக்கும், காதொலி கருவி மற்றும் ஊன்றுகோல் 5 பேருக்கும், இலவச வீட்டு மனை பட்டா 11 பேருக்கும், வாழ்வாதார வங்கி கடனுதவி மகளிர் உதவி குழு 6 குழுக்களுக்கும், ஆன்லைன் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என மொத்தம் 39 லட்சத்தி 11 ஆயிரத்து 70 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...