கோவை அருகே குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் சிசிடிவி கேமராக்கள் - டிஎஸ்பி நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் முத்துநகர் பகுதியில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் நலச்சங்கம் சார்பில் 24 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.


கோவை: நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த முத்துநகர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.



கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் பல இடங்களில் அப்பகுதி நலச்சங்களுடன் இணைந்து சி.சி.டி.வி கேமராக்களை காவல்துறையினர் பொறுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் முத்துநகர் பகுதி முழுவதும் 24 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணி இன்று தொடங்கியது.



இதனை பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு நலச்சங்க தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் துரைசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.



தொடர்ந்து இந்த நிகழ்வில் டி.எஸ்.பி பேசியதாவது, கடந்த 5 மாதத்திற்கு முன்பு உங்களிடம் இந்த பகுதிக்கு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கூறினேன். தற்போது முத்துநகர் பொது நலச்சங்கம் சார்பாக 24 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் மூலம் முத்து நகர் பகுதிக்குள் யார் யார் உள்ளே வருகிறார்கள் என்பதனை கண்காணிக்க அந்த பகுதிகளில் 10 இடங்களில் பொதுமக்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி இந்த கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

இந்த கேமராக்களை வி-கேர் சிஸ்டம்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கட் தலைமையில் அதன் தொழிலாளர்கள் பொருத்தியுள்ளனர். மேலும் இந்த கேமராக்களை கண்காணிக்கவும் ஒரு நபரை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் காவலர் சசி மற்றும் முத்துநகர் பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...