பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை மீட்க வந்த அதிகாரிகள் - விவசாயிகள் எதிர்ப்பு!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் சாகுபடி நிலத்தை மீட்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியை சேர்ந்த 11 விவசாயிகள், சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இதற்கான குறிப்பிட்ட குத்தகை தொகையை செலுத்தி வருவதாக தெரிகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 18 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்கும் முயற்சியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் சார்பில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இதற்கு கோவில் நிர்வாகம் பதிலளித்துள்ள நிலையில், இன்று இந்து அறநிலையத்துறை, மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பை மீட்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.



அப்போது நிலத்திற்கு செல்லும் சாலையில் குறுக்கே டிராக்டரை நிறுத்திய விவசாயிகள் அதிகாரிகள் உள்ளே செல்லாதவாறு தடுத்தி நிறுத்தினர். 

அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை மீண்டும் 7 ஆம் தேதி வர உள்ள நிலையில், அவசரகதியில் விவசாய நிலத்தை அதிகாரிகள் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 

தொடர்ந்து வாக்குவாதம் நீடித்து வந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில், விவசாயிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், போலீசாரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, பல காலமாக குத்தகை பணம் செலுத்தி விவசாயம் செய்து வரும் நிலையில் அதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. இது தொடர்பாக தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர்களிடமும் முறையிட உள்ளதாகவும், விவசாயிகளுக்கு சாதகமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...