கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய நபர் கைது - போலீசார் விசாரணை!

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடிச்சென்ற நிலையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பணம் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை பெரிய கடை வீதியில் கோவையின் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் கோவில் வளாகத்தினுள் நுழைந்து மேற்கு பக்கம் அமைந்துள்ள ஆதி கோனியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த உண்டியலில் இருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடிச் சென்றார். 

இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் சிவன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கோவில் உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (எ) சதீஷ் (32), என்பவரை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து, அவரிடமிருந்த பணம் மற்றும் திருட பயண்படுத்திய இரும்பு கம்பியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...