கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் - ஆட்சியர் துவங்கி வைத்தார்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்டந்தோறும் மஞ்சப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு அதனை உபயோகிப்பதற்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். 



இது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கோவையில் வைக்கப்பட்டுள்ள முதல் தானியங்கி இயந்திரமாகும். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் உட்பட 5 இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்த தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. 

இதுதவிர கோவை மாநகராட்சிக்கு 5 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 5 இயந்திரங்களை பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...