மாற்று சான்றிதழ் வழங்காத கல்லூரி நிர்வாகம் - திருப்பூர் ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மாணவி கோரிக்கை மனு!

காரமடையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் அருந்ததியர் இன மாணவிக்கு இலவச கல்வி என கூறிவிட்டு கல்வி கட்டணம் கட்டச் சொன்னதால், பாதியில் நின்ற மங்கலம் பகுதியை சேர்ந்த அருந்ததியர் இன மாணவி சங்கீதா, மாற்றுச்சான்றிதழை கல்லூரி நிர்வாகம் வழங்க மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



திருப்பூர்: மாற்று சான்றிதழ் வழங்காத கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனு அளித்துள்ளார். 



திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்துள்ளார். 

இதையடுத்து காரமடையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் 2022 - 23ஆம் ஆண்டில் இசிஇ படிப்பில் சேர விண்ணப்பித்த நிலையில், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுகத்திற்கு இலவச கல்வி படிப்பு என்று கல்வி நிர்வாகம் கூறியதை நம்பி இசிஇ பாடப் பிரிவில் சேர்ந்து 40 நாட்கள் கல்வி கற்பித்த நிலையில் கல்லூரி நிர்வாகமானது கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென்று கூறியதாக தெரிகிறது. 

அருந்ததியர் இன மாணவிகளுக்கு இலவச கல்வி என்று கூறியதாலேயே கல்லூரியில் சேர்ந்ததாகவும் தற்போது கட்டணம் கட்ட கூறி வற்புறுத்தியதால் கல்லூரியில் இருந்து நின்றுவிட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் மாற்று சான்றிதழ் வழங்க மருத்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும், மாற்றுத் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் கல்லூரியில் படித்த 40 நாட்களுக்கான கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கூறி தன்னையும் தனது குடும்பத்தாரையும் கல்லூரி நிர்வாகம் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும், மாற்று சான்றிதழ் கொடுக்காததால் வேறு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார். 



எனவே, மாவட்ட நிர்வாகம் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதோடு தனது மாற்று சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கூறி பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...