தமிழகத்தில் லஞ்ச லாவன்யம் தலை விரித்தாடுகிறது - பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி குற்றச்சாட்டு!

கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனகசபாபதி, இன்பச் சுற்றுலா செல்வதற்காகவே முதல்வர் வெளிநாட்டு பயணம் செய்கிறார் என்றும், தமிழகத்தில் லஞ்ச லாவன்யம் தலை விரித்தாடுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.



கோவை: இன்பச் சுற்றுலா செல்வதற்காகவே முதல்வர் வெளிநாட்டு பயணம் செய்வதாக பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி குற்றம் சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடியின் 9 வருட ஆட்சியின் சாதனை குறித்து கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு அளப்பரிய சாதனை செய்திருக்கிறது. 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியிருக்கிறது. 

உலக பொருளாதாரத்தில் வெளிச்சம் தரக்கூடிய பகுதி என இந்தியாவை குறிப்பிட்டு வருகின்றனர். பப்புவா நியூ கினியா பிரதமர் நமது பிரதமரின் காலை தொட்டு வணங்கினார். உலகம் முழுவதும் பிரதமரின் பெயர் பெரிய அளவிற்கு வந்துள்ளது. 

உலக அளவில் பிற நாடுகளுக்கு உதவி செய்வது துணிச்சலாக முடிவெடுப்பது உள்ளிட்டவை பிரதமரின் ஆளுமையை காட்டுகின்றன. 13 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு, முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி உள்ளிட்ட சாதனைகளை மூடிய அரசு செய்திருக்கிறது. மே 30 தொடங்கி ஜுன் 30 வரை பயனாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சியை பாஜக நடத்த உள்ளது. 

கோவையின் எல்லா பகுதிகளிலும் மக்களோடு மக்களாக சென்று மோடியின் சாதனைகளை பிரச்சாரம் மூலம் எடுத்துக் கூற உள்ளோம். நாடு பெரிய முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். 

ஜப்பானுக்கு தமிழக முதல்வர் சென்றது என்பதை பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை ஒப்பிடக்கூடாது. கடந்த முறை துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் என்ன முதலீட்டை கொண்டு வந்தார். இன்பச் சுற்றுலா செல்வதற்காகவே முதல்வர் வெளிநாட்டு பயணம் செல்கிறார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் விமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முயன்ற போது வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் லஞ்ச லாவன்யம் தலை விரித்தாடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...