வால்பாறை பிர்லா அருவியில் புகைப்படம் எடுத்த போது தவறி விழுந்து சுற்றுலா பயணி மாயம்!

வால்பாறைக்கு சுற்றுலா வந்த கோவையை சேர்ந்த ஜாகர் (21) பிர்லா அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய மாயமான நிலையில், தகவலின் பேரில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் மாயமான இளைஞரை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் பிர்லா அருவியில் புகைப்படம் எடுத்த போது நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாஜூ என்பவரது மகன் ஜாகர் (21). இவர் தனது பெண் தோழியுடன் வால்பாறைக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வால்பாறை பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு இன்று காலை வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா பால்ஸ் அருவிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அருவி அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்றபோது கால் தவறி ஜாகர் தண்ணிருக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது தோழியும் தண்ணிரில் குதித்துள்ளார். ஜாகர் நீரில் மூழ்கிய நிலையில், அந்த பெண் தண்ணிரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

தண்ணிரில் மூழ்கிய நண்பரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளார்.



இதனையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கியவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



புகைப்படம் எடுக்க சென்று நீரில் மூழ்கி வாலிபர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...