கோவையில் அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ.40,000 அபராதம்!

கோவை‌ மாநகராட்சியின்‌ அனுமதியின்றி தொழிற்சாலைகளில்‌ வெளியேறும்‌ கழிவு நீரை வாகனத்தில்‌ எடுத்து வந்து வெள்ளக்கிணறு பகுதியில்‌ வெளியேற்றிய வாகன உரிமையாளருக்கு ரூ.40,000 அபராதம்‌ விதிக்கப்பட்டு, வாகனம்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை வெள்ளக்கிணறு அருகே அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகளை கொண்டு வந்து இறக்கிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் வார்டு எண்‌.2க்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில்‌ உள்ள வீடுகள்‌, மற்றும்‌ தொழிற்சாலைகளில்‌ சேகரமாகும்‌ கழிவு நீரை சேகரிக்கும்,‌ தனியார்‌ கழிவு நீர்‌ உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ அதனை மாநகராட்சிக்கு சொந்தமான உக்கடம்‌ கழிவுநீர்‌ பண்ணையில்‌ தான்‌ கொட்ட வேண்டும்‌ என ஏற்கனவே மாநகராட்சி மூலம்‌ தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்‌, வெள்ளக்கிணறு பகுதியில்‌ சில தனியார்‌ வாகனங்கள்‌ கழிவு நீரை பொது இடங்களில்‌ கொட்டுவதாக தொடர்ந்து புகார்கள்‌ வந்த வண்ணம்‌ இருந்தது. அதனடிப்படையில்‌ கடந்த 28ஆம் தேதி TN 22 CD 8773 என்ற பதிவெண் கொண்ட வாகனம்‌ வெள்ளக்கிணறு பகுதியில்‌ சட்ட விரோதமாக பொது இடத்தில்‌ கழிவுநீரை வெளியேற்றும்‌ பொழுது கையும் களவுமாக பிடிபட்டது.

இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த வாகன உரிமையாளருக்கு ரூ.40,000 அபராதம்‌ விதிக்கப்பட்டு, வாகனம்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டது. மேலும்‌, இனிவரும்‌ காலங்களில்‌ தனியார்‌ கழிவு நீர் உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ இதுபோன்ற தவறான சட்டவிரோத நடவடிக்கைகளில்‌ ஈடுபடும்‌ பட்சத்தில்‌ அவர்கள்‌ மீது, அபராதம்‌ விதிக்கப்பட்டு, உரிமம்‌ ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...