சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மேயரிடம் அதிமுக உறுப்பினர்கள் மனு!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வரும் கேரளா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாநகராட்சி மேயரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருப்பூர்: சிறுவாணியின் குறுக்கே கேரள அரசின் அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரி மேயரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக குழு தலைவருமான அன்பகம் திருப்பதி கூட்டத்தில் பேசினார்.



அப்போது அவர் பேசியதாவது, திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு பாதிக்கக் கூடிய வகையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன் பாதிப்பை உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.



இது தொடர்பாக பேசிய மாநகராட்சி மேயர் ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட அமைச்சர்கள் மூலமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் திருப்பூரில் தண்ணீர் வரத்து பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...