ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி மத்திய அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்!

ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஜி.என்.மில்ஸ் தபால் அலுவலகம் அருகில் சுமார் 100க்கும் மேற்பட்ட இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் ஓய்வூதியதாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் பஞ்சாலை மற்றும் இன்ஜினியரிங் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதனை உயர்த்த வேண்டும் என்றுகூறி இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கம் சார்பாக சென்னையில் கூட்டம் நடைபெற்றது.

அதற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் மணியோசை எழுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மே 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஜி.என்.மில்ஸ் தபால் அலுவலகம் அருகில் சுமார் 100க்கும் மேற்பட்ட இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அனைவரையும் உறுப்பினர் தேவேந்திரன் வரவேற்று பேசினார்.



சங்க உறுப்பினர் மெளனசாமி சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் பென்சனை உயர்த்தகோரி குறைந்த பட்சம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், இடைகாலமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும். இ.பி.எப் ஓய்வூதியதாரர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும், உயர் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...