புனித அந்தோனியரின் சுவாச குழாய் விலா எழும்பு அடங்கிய திருபண்ட திருவுருவ சிலை 5ம் தேதி கோவை கொண்டு வரப்படுகிறது



இத்தாலி நாட்டில் பத்துவா என்ற இடத்தில் உள்ள புனித அந்தோனியரின் சுவாச குழாய் விலா எழும்பு அடங்கிய திருபண்ட திருவுருவ சிலை வரும்- 5ம் தேதி கோவை கொண்டு வரபடுகிறது. இதனை இங்கு கொண்டு வர பிரான்ஸிஸ்கன் துறவர சபை சார்பில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில், ஸ்னேகாலயா தலைமை ஆயர் எலியாஸ் கூறும்போது, இத்திருவுருவ சிலையானது 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா கொண்டு வரப்பட்டு எர்னாகுளம், திருச்சூர், கோட்டையம், திருவனந்தபுரம் பகுதிகளில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கபட்டது.

தற்போது இச்சிலை இத்தாலி நாட்டில் இருந்து கடந்த 9-ம் தேதி ஹைதராபாத் கொண்டு வரபட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்ட ஆலயங்களில் வைக்கபட்டு, பின் 15ம் தேதி முதல் கேரள மாநிலம் கோட்டையம், எர்ணாகுளம், இடுக்கியில் வைக்கபட்டது.

இதைத்தொடர்ந்து, நாளை கோத்தகிரிக்கு கொண்டு செல்லபடுகின்றது. அங்கிருந்து வரும் மார்ச் 5-ம் தேதியன்று காலை 8 மணிக்கு கோவை மாநகருக்கு அச்சிலை கொண்டு வரப்படும். திருபண்ட திருவுருவ சிலையை பங்கு தந்தை ஜான்சன் வீப்பாட்டுபறம்பில் தலைமையில் ஆலயதிற்கு கொண்டு வரபட்டு சிறப்பு பிராத்தனை நடத்தப்படும்.

காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்களின் பார்வைக்காக இச்சிலை வைக்கபடுகிறது. பின்னர் க.க.சாவடி ஸ்நேகாலயாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 7 மணி வரை வைக்கப்பட உள்ளது. 

பின் அங்கிருந்து, கேரளா அங்கமாலிக்கு எடுத்துச் செல்லபட்டு 15ம் தேதி வரை வைக்கப்பட்டு அங்கிருந்து இத்தாலி கொண்டு செல்லபடும் என தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டு வருவதாகவும். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அறங்காவலர் அந்தோனி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...