கோவையில் அரசு பொருட்காட்சி மூலம் ரூ.13.99 லட்சம் வருவாய் - ஆட்சியர் தகவல்!

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த 16 நாட்களாக நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியினை ஒரு லட்சத்து 93 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.13.99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: காந்திபுரம் அருகே நடைபெற்ற அரசு பொருட்காட்சியின் மூலம் இதுவரை ரூ.13.99 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, காந்திபுரம் பகுதியில் உள்ள சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த 13ம் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது.



இந்த பொருட்காட்சியில் 27 அரசுத்துறை அரங்குகளும், 6 அரசுசார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

அரசுப்பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு 15 ரூபாயும் சிறியவர்களுக்கு 10 ரூபாயும் பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்டணமாக 5 ரூபாயும் நுழைவுக் மாணவ கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வரை நடைபெற்ற 16 நாட்களில் அரசு பொருட்காட்சியினை பெரியவர்கள், சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 93 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் 13 லட்சத்து 99 ஆயிரத்து 125 ரூபாய் அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...