டெல்லியில் போராடும் வீராங்கனைகளை தாக்கிய போலீசார் - கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் நீதி கேட்டு போராடும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளை தாக்கிய டெல்லி காவல்துறையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: டெல்லியில் போராடும் விளையாட்டு வீராங்கனைகளை தாக்கிய போலீசாரை கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீராக்கனைகளை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்தனர்.



இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு மற்றும் டெல்லி காவல் துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது மாதர் சங்கத்தினர் பேசியதாவது, 6 மாதங்களுக்கு முன் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் நியாயத்திற்காக போராடும் வீராங்கனைகளை ஒடுக்குகின்றனர்.

விளையாட்டு துறையில் இம்மாதிரியான சம்பவங்கள் பெண்கள் பாதுகாப்பையே கேள்வி குறியாக்கியுள்ளது. இதனை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...