மதிமுகவில் இருந்து விலகினார் துரைசாமி!

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுங்கள் என வைகோவுக்கு கடிதம் எழுதிய மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும், திமுகவுக்கு தனது ஆதரவு என்றும், தான் எந்த கட்சியிலும் இணைய போவதில்லை எனவும் கூறியுள்ளார்.


திருப்பூர்: மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மதிமுகவின் அவைத்தலைவர் துரைசாமி அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் மதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அண்மை காலமாக துரை வைகோவின் வருகைக்குப் பிறகு அதிருப்தியில் இருந்த மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கடந்த மாதம் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என வைகோவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் அவைத் தலைவர் துரைசாமி பேசியதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

திமுகவுக்கு எனது ஆதரவை மட்டும் அளிக்கிறேன். எந்த கட்சியிலும் இணைய போவதில்லை. எனது தொழிற்சங்கத்தை தொடர்ந்து நடத்த இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...