சிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் - நெரிசல் கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தகவல்!

சிங்காநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், சோதனை அடிப்படையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் முழுமையாக கட்டுக்குள் உள்ளதாக மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: சிங்காநல்லூர் சந்திப்பில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், போக்குவரத்து நெரிசல் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை மாநகர் பகுதிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய அவிநாசி சாலை, சுங்கம், ப்ரூபீல்ட் சாலை, வடகோவை, ஆத்துப்பாலம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பேரிகாடுகள் மூலமாக தற்காலிக ரவுண்டானா மற்றும் “U turn” உள்ளிட்ட மாற்றங்களை செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர். 



இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அண்மையில் கோவை வந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி சாலையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிங்காநல்லூர் சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்து வந்தது.

இதனிடையே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போலீசார் சார்பில் சோதனை அடிப்படையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.



அதன்படி அவிநாசி சாலையில் இருந்து சிங்காநல்லூர் சந்திப்பு வழியாக வெள்ளலூர் செல்லும் வாகன ஓட்டிகள், இடது புறமாக சென்று “U turn” செய்து மீண்டும் இடது புறமாக வெள்ளலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. 



இதேபோல் அவிநாசி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் உழவர் சந்தை அருகே “U turn” எடுத்து இடது புறமாக அவிநாசி சாலைக்கு செல்லும் வகையில் பேரிகாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும் நேராக செல்லும் வாகனங்கள் எந்த இடையூறும் இல்லாமல் சாலையில் செல்ல வகை செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் வழக்கமாக சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீண்ட சிக்னலில் நின்று வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. சோதனையாக செயல்படுத்தி உள்ள இந்தத் திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறையும் என்றால், அதனை நிரந்தரமாக ரவுண்டானா அல்லது தடுப்புகள் அமைக்க மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...