போத்தனூர் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 471 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

போத்தனூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சாரமேடு பகுதியை சேர்ந்த அப்துல் கரீம்(45) என்பவரை கைது செய்த போலீசார், 471 கிலோ அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: போத்தனூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கரும்புக்கடை சாரமேடு ராஜீவ் நகரை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் அப்துல் கரீம்(45). இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் அவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போத்தனுர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது காரில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து காரில் இருந்த 471 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார். அப்துல்கரீமை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...