இடுவாய் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் உண்ணாவிரதம்!

பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமையவுள்ள அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் ஊருக்கு வெளியில் அரசு மதுபான கடை எண்:2300 இயங்கி வருகிறது. இந்த கடையை குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் புதிதாக கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

மதுபான கடைக்கு வரும் நபர்களால் அப்பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல அச்சமாக உள்ளது. விபத்துக்கள் அதிக அளவில் நடக்கிறது.



குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மதுபான கடையை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், குழந்தைகளுடன், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து, மதுக்கடையை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் கொண்டு வர வேண்டாம் என்ற பதாகைகளுடன் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

புதிதாக அமைக்கப்படவுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...