மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி - பல்லடம் பகுதி மாணவர்கள் வென்று சாதனை!

செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உதை குத்து சண்டை போட்டி நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் தங்க பதக்கமும், வெள்ளி, வெண்கல பதக்கங்களை தலா 2 பேரும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர்: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், திருப்பூரை சேர்ந்த 7 மாணவர்கள் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

கடந்த மே 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்கள் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உதை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 750 குத்துச்சண்டை வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். 



இதில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த திருப்பூர் மாவட்ட பாக்சிங் அசோசியேஷனில் பயிற்சி பெற்ற அகர்ஷன், விக்னேஷ், மோனீஷ், விஜய் ஹரிஹரன், தீபக், ருத்ரேஷ், பாலசூர்யா, மனோஜ், சுமந்த், கவின், அஸ்வின் ஆகிய 11 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.

வயது மற்றும் எடை அடிப்படையில் நடைபெற்ற இந்த உதை குத்து சண்டை போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் தங்க பதக்கங்களையும், 2 பேர் வெள்ளி பதக்கமும் மற்றும் 2 பேர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இது போன்ற இளம் வீரர்களுக்கு மாதாமாதம் ஊக்கத்தொகை அளித்து அரசு ஊக்குவித்தால் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதனை புரிய ஊக்கமளிக்கும் வகையில் என குத்துச்சண்டை பயிற்சியாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...