கோவை மேற்கு, மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், புனரமைப்பு பணிகள் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சியின் மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16க்கு உட்பட்ட அருள்‌ நகர்‌ பகுதியில்‌ ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌, மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார்.

பின்னர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளார்களுக்கு அறிவுரை வழங்கினார்‌. 



தொடர்ந்து, கோவை‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, மண்டலம்‌ வார்டு எண்‌.69க்கு உட்பட்ட ராமலிங்கம்‌ காலனி, பாரதி பூங்காவில்‌ புனரமைக்கப்பட உள்ள உடற்பயிற்சி கூடம்‌, நடைபாதை ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பூங்காவின்‌ மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்‌. 



பின்னர், கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.60க்கு உட்பட்ட ராமலிங்கம்‌ காலனி, பாரதி பூங்கா பகுதியில்‌ மக்கும்‌ கழிவுகள்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்‌.



கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.72-க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள மலர்‌ அங்காடி புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...