கோவை வேளாண் பல்கலை.-யில் உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கங்களுக்கான மேலாண்மை பயிற்சி!

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ தமிழ்நாடு சிறு விவசாயிகள்‌ வேளாண்‌ வணிகக்‌ கூட்டமைப்பின்‌ கீழ்‌ இயங்கும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கங்களுக்கான மேலாண்மை பயிற்சி இன்று (மே.31) தொடங்கியது. ஜூன்.1 மற்றும் 2ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறும் என அறிவிப்பு

கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கங்களுக்கான மேலாண்மை பயிற்சி இன்று தொடங்கியது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ தமிழ்நாடு சிறு விவசாயிகள்‌ வேளாண்‌ வணிகக்‌ கூட்டமைப்பின்‌ கீழ்‌ இயங்கும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ சஙகங்களுக்கான மேலாண்மை பயிற்சி இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த பயிற்சியானது ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வணிகத்துறையின்‌ துணையோடு கோவை‌, திருப்பூர்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ உள்ள 1005ஐ சேர்ந்த சுமார்‌ 80 விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ பயிற்சியை துவக்கி வைத்து வேளாண்‌ வணிகத்திற்கான வாய்ப்புகளை குறித்து விரிவுரை வழங்கினார்‌.

தொழில்நுட்ப வணிக காப்பகத்தின்‌ தலைமை செயல்‌ அதிகாரி, ஞான சம்பந்தம்‌, அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார்‌. முனைவர்‌ சாந்த சீலா மற்றும்‌ முனைவர்‌ மலர்கொடி விவசாயிகளிடம்‌ உரை நிகழ்த்தினர்‌.

துறை சார்ந்த வல்லுநர்களைக்‌ கொண்டு அங்கக விவசாயிகளுக்கான உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கம்‌ உருவாக்குதல், உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கங்களுக்கான சட்ட திட்டங்கள்‌, உற்பத்தி பொருட்களுக்கான வாய்ப்புகள்‌ மற்றும்‌ சவால்கள், நிர்வாகம்‌, விளை பொருட்களின்‌ விலை நிர்ணயம்‌ மற்றும்‌ ஏற்றுமதி, நிதி மேலாண்மை, தலைமைத்துவ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ குழு உருவாக்கம்‌, தோட்டக்கலை பயிர்களின்‌ மதிப்புக்கூட்டல்‌ ஆகிய தலைப்புகளில்‌ பயிற்சி நடைபெறுகிறது.

இப்பயிற்சிக்கு பின்‌ ஒரு நாள்‌ விவசாய கண்டுணர்‌ சுற்றுலா தமிழகத்திலும்‌ மற்றும்‌ 5 நாள்‌ விவசாய சுற்றுலா அண்டை மாநிலத்திலும்‌ நடைபெறும்‌. இப்பயிற்சி தொடக்கநிலை உள்ள உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்ககங்களுக்கு வேளாண்‌ வணிகம்‌ சார்ந்த சவால்களை எதிர்‌ கொள்ளவும்‌ திறனை மேம்படுத்தி கொள்ளவும்‌ ஒரு வாய்ப்பாக அமையும்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தொழில்நுட்ப ஆதரவுடன்‌ தமிழ்நாடு சிறு விவசாயிகள்‌ வேளாண்‌ வணிகக்‌ கூட்டமைப்பானது 318 உழவர்‌ அமைப்புகளில்‌ உறுப்பினர்களை வேளாண்‌ தொழில்‌ முனைவோராக மாற்றுவதற்கு இதே போன்ற பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...