கோவையில் பிளக்ஸ் பேனர் வைத்த போது விபத்து - 3 பேர் பலி

கருமத்தம்பட்டி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிளக்ஸ் பேனர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் அவசரகதியில் இறங்கியதால், பேனர் கம்பி சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கருமத்தம்பட்டி அடுத்த தெக்கலூர் அருகே 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிளக்ஸ் பேனர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். 



அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், பெரிய பேனர் பேனல் காற்றில் ஆடியது, இதையடுத்து அனைவரும் அவசரகதியில் இறங்கிய போது, பேனர் பேனல் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.





இந்த விபத்தில் கீழே விழுந்த குணசேகரன் (52), குமார் (50), குமார் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ கருமத்தப்பட்டி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பேனர் வைத்த போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...