திருப்பூரில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பாட்டில் விற்பனை செய்த பேக்கரிக்கு நோட்டீஸ்!

மங்கலம் சாலை அடுத்த எஸ்.ஆர். நகரில் செயல்பட்டு வந்த பேக்கரி ஒன்றில் சுகாதாரமற்ற நிலையில், குடிநீர் பாட்டில் விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பேக்கரியில் நடத்திய சோதனையில், அழுகிய உருளைக்கிழங்கு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் இருந்தது குறித்து பேக்கரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பாட்டிலை விற்பனை செய்த பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை அடுத்த எஸ்.ஆர். நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நீலாம்பிகை அய்யங்கார் பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். அந்த தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதுகுறித்து அந்த நபர் கடை ஊழியர்களிடம் கேட்டபோது உரிய பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார்.



இந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் ரவி தலைமையிலான அதிகாரிகள் கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தனர்.



அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 



தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த கடை உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும், ஆய்வு செய்யும் பொழுது அழுகிய உருளைக்கிழங்கு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர் மேலும் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட குடிநீர் பாட்டிலை ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...