கோவையில் அனுமதியற்ற 185 விளம்பர பலகைகள் அகற்றம்!

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 185 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக, சமீபத்தில் கருமத்தம்பட்டியில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 185 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பு, காவல்துறையினர் இணைந்து அகற்ற தனிக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தெக்கலூர் அடுத்த நீலாம்பூர் சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற காவல்துறையினர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே கருமத்தம்பட்டி அருகே இரும்பு கம்பம் சரிந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும், நில உரிமையாளர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கும் பட்சத்தில் நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தினர் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...