மாற்றுத்திறனாளி கைப்பந்து வீராங்கனைக்கு கோவை டி.ஐ.ஜி பாராட்டு!

நேபாள நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



கோவை: நேபாள நாட்டில் நடைபெற்ற மாறுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் பாராட்டினார். 

நேபாள நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் (International Open Kathmandu Sitting Volleyball Championship) போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில், கோவை சரக அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு, கோவையில் உள்ள இந்தியா பாரா வாலிபால் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இந்திரா என்பவர் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

இதனை அறிந்த கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், வெற்றி பெற்ற மாற்றத்திறனாளி கைப்பந்து வீராங்கனையை பாராட்டும் விதமாக கோவை காவல் சரக அலுவலகத்தில் வைத்து பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...