குன்னூர் அருகே 15 சவரன் நகை, ரூ.40,000 பணம் கொள்ளை - கைவரிசை காட்டிய பெண் கைது!

குன்னூர் அடுத்த அட்டடி பகுதியை சேர்ந்த மேத்யூ என்பவர் திருமண நிகழ்ச்சிக்காக வெளியில் சென்ற போது, அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் நகை, ரூ.40,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த ஆரோக்கிய மேரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.



நீலகிரி: குன்னூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் நகை, ரூ.40,000 பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அட்டடி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டில் உள்ள பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.40,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர், நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கிய மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...