கோவை குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை - ஆட்டோ ஓட்டுநர் கைது!

குறிச்சி அருகே லாட்டரி விற்பனை தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் குறிச்சி அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன் மூலமாக மூணு நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராக்கியப்பன் தலைமையிலான போலீசார் குறிச்சி காந்திஜி சாலை பகுதிக்கு ரோந்து சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் பிடிபட்ட நபர் போத்தனூர் குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரகாஷ் (47) என்பதும், ஆட்டோ ஓட்டி வரும் பிரகாஷ் கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து குறிச்சி, சுந்தராபுரம் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இவர், செல்போன் மூலம் மூணு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 10 லாட்டரி சீட்டுகள், செல்போன், நோட்டுப் புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தபோலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...