கோவை கூடலூரில் மக்கள் தொடர்பு முகாம் - ரூ.2.06 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன!

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கேஸ் கம்பெனி பகுதியில் மாவட்ட வருவாய் துறை சார்பாக மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கலந்துகொண்டு 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.



கோவை: கூடலூர் அருகே மாவட்ட வருவாய் துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட வருவாய் துறை சார்பாக கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கேஸ் கம்பெனி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமை தாங்கினார். 

மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வபிரகாஷ், கூடலூர் நகராட்சி ஆணையர் பால்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.ஷர்மிளா பயனாளிகளுக்கு 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 80 பயனாளிகளுக்கும், வருவாய்த் துறையால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா 79 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் இணைய வழிப்பட்ட 57 பயனாளிகளுக்கும் மகளிர் சுய உதவி குழு மானியம் 2 பயனாளிகளுக்கும் தோட்டக்கலை துறையின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை ஒரு பயனாளிக்கும் வழங்கப்பட்டன. 

மேலும், வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை 4 பயனாளிகளுக்கும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ட்ரில்லர் கருவி ஒரு பயனாளிக்கும் குடும்ப அட்டை 10 பயனாளிகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் எந்திரம் 3 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன. 



முன்னதாக இந்நிகழ்ச்சியில் விவசாய கையேடும் வெளியிட்டனர். விவசாயத் துறை, மருத்துவத்துறை, மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.



மேலும் நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கோவிந்தன், தாசில்தார் தங்கராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...