கோவையில் பேனர் சரிந்து மூவர் உயிரிழந்த விவகாரம் - இருவர் கைது!

கோவை கருமத்தம்பட்டி அருகே பேனர் சரிந்து 3 பேர் உயிரிழந்த வழக்கில், சப் காண்ட்ராக்டர் பழனிசாமி மற்றும் மேலாளர் அருண் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ராட்சத பேனர் அமைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளர் ராமசாமி மற்றும் காண்ட்ராக்டர் பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பேனர் சரிந்து மூன்று பேர் உயிரிழந்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி நடந்த போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் குணசேகரன் (52), செந்தில் குமார் என்கின்ற செந்தில் முருகன் (38), குமார் (51) ஆகிய 3 தொழிலாளர்கள் கீழே இறங்குவதற்கு முன்னரே பேனர் சாய்ந்ததில் சாரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனை அடுத்து அலட்சியமாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் நால்வர் மீது வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார், சப் காண்ட்ராக்டர் பழனிசாமி மற்றும் மேலாளர் அருண் ஆகியோரை கைது செய்தனர். 

அதே போல தலைமறைவாக உள்ள ராட்சத பேனர் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளர் ராமசாமி மற்றும் காண்ட்ராக்டர் பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...