வால்பாறையில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு!

வால்பாறையில் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி துவங்கி வைத்தார்.



கோவை: வால்பாறையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி, நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக வால்பாறை கலை கல்லூரியில் நகரங்களின் தூய்மைக்கான பணியை நகராட்சி தலைவர் அழகுசுந்தவள்ளி துவங்கி வைத்தார். 

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



பின்பு காந்தி சிலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்து தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும், நகரங்களை தூய்மையாக வைக்க வேண்டும், என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...